/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க வலியுறுத்தல் பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க வலியுறுத்தல்
பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க வலியுறுத்தல்
பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க வலியுறுத்தல்
பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலை பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : மே 11, 2025 01:04 AM
அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் ஜவுளி, பைனான்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறை தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். அருகில் உள்ள கரூருக்கு சென்று, அங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணமாகி இரவு வீடு திரும்புகின்றனர். அதிகாலை கிளம்பி செல்ல பஸ் வசதி இல்லாததால், தொழில் செய்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், அதிகாலையில் எழுந்து கல்லுாரி செல்லும் மாணவர்கள், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலத்திற்கு முன், அதிகாலை, 3:00 மணி முதல் பஸ்
இயக்கப்பட்டு வந்தது. அதன்பின், 5:00 மணி என மாற்றியமைக்கப்பட்டது. இதனால், மாணவர்கள், தொழில் முனைவோர் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி, அதற்கு மாற்றாக அரசு சிறப்பு பஸ் அல்லது மதுரை-சேலம் வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பைபாஸில் செல்லும் ஏதாவது ஒரு பஸ்சை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி சாலை வழியாக கரூருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள்
வலியுறுத்துகின்றனர்.