ADDED : செப் 05, 2025 01:04 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்த முருகேசன், 52, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் திரிஷா, 21, எல்.ஐ.சி., ஏஜென்ட் நடத்தி வரும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஆக., 19 காலை 10:00 மணியளவில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.