Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் 26.66 கோடி ரூபாயில் 40,825 கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி

கரூர் மாவட்டத்தில் 26.66 கோடி ரூபாயில் 40,825 கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி

கரூர் மாவட்டத்தில் 26.66 கோடி ரூபாயில் 40,825 கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி

கரூர் மாவட்டத்தில் 26.66 கோடி ரூபாயில் 40,825 கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி

ADDED : செப் 05, 2025 01:04 AM


Google News
கரூர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 40,825 கர்ப்பிணிகளுக்கு, ௨6.66 கோடி ரூபாய் மதிப்பில், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், பிரசவத்தின் போது பெண்களின் இறப்பு விகிதம் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைக்கவும், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகிறது.

ஏழை எளிய கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவது, ஊதிய இழப்பை ஈடு செய்ய, 18,000 ரூபாய் உதவித்

தொகையாக வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் ரத்த

சோகையை போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை அதிகப்படுத்தவும், 4,000 ரூபாய் மதிப்புள்ள, 12 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.

கடந்த, 4 ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 40,825 கர்ப்பிணி பெண்களுக்கு, 26.66 கோடி ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணிகள் கருத்தரித்த, 12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியரிடம் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் உள்ளிட்டவற்றை தெரிவித்து, தங்களுடைய பெயரை பதிவு செய்து, பிக்மி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us