Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் வட்டார போட்டிக்கு தேர்வு

அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் வட்டார போட்டிக்கு தேர்வு

அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் வட்டார போட்டிக்கு தேர்வு

அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் வட்டார போட்டிக்கு தேர்வு

ADDED : செப் 05, 2025 01:03 AM


Google News
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கலை திருவிழா போட்டியில் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு, மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களுடைய பேச்சு, நடிப்பு, பாடல், நடனம், களிமண் பொம்மை செய்தல் ஆகிய போட்டிகளில் பசுமையும், பாரம்பரியமும் என்ற கருப்பொருளில் இந்தாண்டு கலைத்திருவிழா போட்டி நடந்து வருகிறது.

அதில், குறுவட்ட அளவில் போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் களிமண் பொம்மை செய்தலில் சுபதர்ஷினி, மாறுவேட போட்டியில் மேத்யூ காட்வின், கதை கூறுதலில் முகமது ஷாரிக், வண்ணம் தீட்டுதலில் சன்விகா, மழலையர் பாடல் ஒப்புவித்தலில் மாஹிரா, நாட்டுப்புற நடனத்தில் (தனி) யோகவர்ஷினி, களிமண் பொம்மை செய்தலில் முகமது சாகிர், மாறுவேட போட்டியில் ஸ்ரீ வத்சா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.மெல்லிசை தனிப்பாடலில் தமிழ்வீர், பேச்சு போட்டியில் மதனா, நாட்டுப்புற நடனம் குழுவில் வாஜிதா முப்லிஹா, தரணீஸ்வரன், யோகவர்ஷினி, முகமது சாகிர், அனுக்கிருத்திகா, அகிலன், ரிபா பாத்திமா, அம்ரின், திருக்குறள் ஒப்புவித்தலில் சந்தோஷ், மழலையர் பாடல் ஆங்கிலம் ஒப்புவித்தலில் முகமது ஷாரிக் இரண்டாம் இடம் பெற்றனர். தேசபக்தி பாடலில் அம்ரின் மூன்றாம் இடம் பெற்றார்.

முதலிடம் பெற்ற மாணவர்கள், அரவக்குறிச்சி வட்டார அளவில் போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், வட்டாரக்கல்வி அலுவலர்கள் சகுந்தலா, தர்மராஜ், தலைமை ஆசிரியர் சாகுல் அமீது, மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு, பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us