/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 08, 2024 02:25 AM
கரூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில், செல்லாண்டிப்பாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும், நெடுஞ்சாலை துறையில் மறு சீரமைப்பு பணிகளை தவிர்க்க வேண்டும், நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டால், இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் சிங்கராயர், இணை செயலாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேசுவரன் உள்பட பலர் பங்கேற்றனர்.