/உள்ளூர் செய்திகள்/கரூர்/அண்ணாமலை மத்திய அமைச்சராக வேண்டும்: விவசாய சங்கம் வேண்டுகோள்அண்ணாமலை மத்திய அமைச்சராக வேண்டும்: விவசாய சங்கம் வேண்டுகோள்
அண்ணாமலை மத்திய அமைச்சராக வேண்டும்: விவசாய சங்கம் வேண்டுகோள்
அண்ணாமலை மத்திய அமைச்சராக வேண்டும்: விவசாய சங்கம் வேண்டுகோள்
அண்ணாமலை மத்திய அமைச்சராக வேண்டும்: விவசாய சங்கம் வேண்டுகோள்
ADDED : ஜூன் 08, 2024 02:25 AM
கரூர்: மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சராக வேண்டும்' என, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்தியில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இணை அமைச்சராக வேண்டும். இதனால் கரூர் மாவட்டம் மட்டுமின்றி, கரூர் லோக்சபா தொகுதியே வளர்ச்சி பெறும். மத்திய அரசின் திட்டங்கள் கரூர் மாவட்டத்துக்கு வரும். கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜி, மாநில, தி.மு.க., அரசில் அமைச்சராக இல்லாத குறையை இதுபோக்கும். கடந்த ஐந்தாண்டுகளாக, காங்., கட்சி எம்.பி.,யாக இருந்த ஜோதிமணி, கரூர் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. வரும், ஐந்தாண்டுகளுக்கும் அவரால் எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது. இந்நிலையில், அண்ணாமலை மத்திய இணை அமைச்சராக வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.