ADDED : ஜூன் 08, 2024 02:26 AM
கரூர்: சாயக்கழிவால் கால்நடைகள் இறப்பதாக கூறி, விவசாயி ஒருவர் கரூர் அருகே, உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கரூர் அருகே, திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 42, விவசாயி. இவர் அதே பகுதியில், தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், தோட்ட த்தில் உள்ள கிணற்றில், சாயக்கழிவு பாதிப்பு உள்ளதால், மாடுகள் இறப்பதாக கூறி கடந்த சில நாட்களாக, வீடு முன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதுகுறித்து வேலுசாமி கூறியதாவது:
விவசாய தோட்டக்கிணற்றில் உள்ள, சாயக் கழிவு பாதிப்பால், 2018 முதல், நான்கு மாடுகள் இறந்து விட்டது. நேற்று முன்தினம் ஒரு மாடு இறந்து விட்டது. ஒரு கன்று குட்டிக்கு, நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த மாட்டின், பிரேத பரிசோதனை அறிக்கையை, கால்நடை துறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். இதனால், உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.