/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் நகரில் மீண்டும் பள்ளம் அச்சத்தில் பொது மக்கள்கரூர் நகரில் மீண்டும் பள்ளம் அச்சத்தில் பொது மக்கள்
கரூர் நகரில் மீண்டும் பள்ளம் அச்சத்தில் பொது மக்கள்
கரூர் நகரில் மீண்டும் பள்ளம் அச்சத்தில் பொது மக்கள்
கரூர் நகரில் மீண்டும் பள்ளம் அச்சத்தில் பொது மக்கள்
ADDED : ஜூன் 08, 2024 02:24 AM
கரூர்: கரூரில் நேற்று மாலை, வாங்கல் சாலையில் திடீரென மீண்டும் பள்ளம் விழுந்தது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதம் அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணாவளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பலமுறை பள்ளம் ஏற்பட்டது. அதை, பல மாதங்கள் போராடி புதிய குழாய்கள் போடப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டு மூடப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை கரூர்-வாங்கல் சாலை பழைய நீதிமன்றம் அருகே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, மீண்டும் பள்ளம் விழுந்தது. இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளத்தை சுற்றி தடுப்புகளை வைத்தனர். மேலும், கரூர்-வாங்கல் சாலையில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பாதாள சாக்கடை குழாயில், அழுத்தம் காரணமாக பள்ளம் ஏற்படும் போதெல்லாம், தற்காலிகமாக தீர்வை ஏற்படுத்துவதை விட்டு விட்டு, நிரந்தர தீர்வை ஏற்படுத்த, கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.