/உள்ளூர் செய்திகள்/கரூர்/அணைப்பாளையம் அணையை துார் வார விவசாயிகள் வேண்டுகோள்அணைப்பாளையம் அணையை துார் வார விவசாயிகள் வேண்டுகோள்
அணைப்பாளையம் அணையை துார் வார விவசாயிகள் வேண்டுகோள்
அணைப்பாளையம் அணையை துார் வார விவசாயிகள் வேண்டுகோள்
அணைப்பாளையம் அணையை துார் வார விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜூன் 11, 2024 06:51 AM
கரூர் : க.பரமத்தி அருகே உள்ள, அணைப்பாளையம் அணையை தூர்வார வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே தென்னிலை கார்வாழி பகுதியில் அணைப்பாளையம் அணைக்கட்டு உள்ளது. கடந்த, 1996 ம் ஆண்டு முதல் அணைப்பாளையம் அணைக்கட்டில், வெள்ளக்காலங்களில் வரும் மழைநீர், கீழ்பவானி ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் ஈரோடு மாவட்டம், சின்ன முத்தூர் நொய்யல் ஆறு தடுப்பணையில் இருந்து, வாய்க்கால் மூலம் தண்ணீர் தேக்கப்படுகிறது.
இதன் மூலம், துக்காட்சி, தென்னிலை கீழ்பாகம், அத்திப்பாளையம், குப்பம், சத்திரம், மண்மங்கலம், வாங்கல், குப்புச்சி பாளையம் வரை, 21,000 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது.
இந்நிலையில், நொய்யல் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட சாயக்கழிவு நீரால், அணைப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த, 2020 முதல் மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில், அணைப்பாளையம் அணையில், நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், அணைப்பாளையம் அணையில் துார் வாரும், நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என, நொய்யல் பாசன வாய்க்கால் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.