/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் திருவிழா பூஜை பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் திருவிழா பூஜை
பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் திருவிழா பூஜை
பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் திருவிழா பூஜை
பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் திருவிழா பூஜை
ADDED : ஜூன் 11, 2024 06:51 AM
கிருஷ்ணராயபுரம் : கோடங்கிப்பட்டி கிராமத்தில், பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் திருவிழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் கிராமம் கோடங்கிப்பட்டி பகுதியில் பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். நேற்று காலை பகவதியம்மன், பாம்பலம்மன் சுவாமிகளுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து திருவீதி உலா நடந்தது.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். கோடங்கிப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.