/உள்ளூர் செய்திகள்/கரூர்/வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவைவாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை
வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை
வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை
வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை
ADDED : ஜூன் 06, 2024 11:51 PM
குளித்தலை : குளித்தலையில், வெள்ளிக்கிழமை தோறும் மதியத்தில் இருந்து இரவு வரை காவிரி நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, சிறுவர் பூங்கா தெருக்களில் வாரச்சந்தை கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் அய்யர்மலை, மாயனுார், தோகைமலை, பஞ்சப்பட்டி, பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி, மளிகை கடை வியாபாரிகள், மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர, நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என வியாபாரிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.