ADDED : ஜூன் 06, 2024 04:11 AM
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழைகரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 3:30 முதல், 4:00 மணி வரை கரூர் நகரம், திருமா நிலையூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்தி கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது.இதனால், கரூர்-கோவை சாலை, திருச்சி சாலை தெரசா கார்னர், சுங்ககேட் பகுதிகளில் மழை நீர் சாலையில் ஓடியது. ஜவஹர் பஜார், அரசு மருத்துவமனை சாலை, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
டூவீலர் மீது அரசு பஸ்மோதி வாலிபர் பலிகரூர்: கரூர் அருகே, அரசு பஸ் மோதிய விபத்தில் டூவீலரில் சென்றவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், பவித்திரம் சாலிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 42; இவர், நேற்று முன்தினம் மதியம் கரூர்-கோவை சாலை வேப்பம்பாளையம் பகுதியில், ஹீரோ ேஹாண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ், டூவீலரின் பின்பகுதியில் மோதியது. அதில், படுகாயம் அடைந்த சுப்பிரமணி, கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, சுப்பிரமணி மனைவி நவலட்சுமி கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மனைவி மாயம்கணவர் புகார்கரூர், ஜூன் 6-கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு தெரு அரசு காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி ராஜேஸ்வரி, 21, இவர் கடந்த, 30 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் ராஜேஸ்வரிசெல்லவில்லை. இதனால் இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, 23, போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலைகளை பராமரிக்கணும்கரூர்: கரூர் கவுரிபுரம் பகுதியில், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில், தார் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்றபடி உள்ளது. மேலும் கரூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமானோர் வேலைக்கு செல்கின்றனர். இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி பொதுமக்கள் காயம் அடைகின்றனர். எனவே, கவுரிபுரம் பகுதியில் உள்ள, குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.