/உள்ளூர் செய்திகள்/கரூர்/கொய்யாப் பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனைகொய்யாப் பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை
கொய்யாப் பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை
கொய்யாப் பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை
கொய்யாப் பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை
ADDED : ஜூன் 07, 2024 12:00 AM
கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டையில், கொய்யாப் பழம் கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையானது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், திருக்காம்புலியூர், வல்லம், புதுப்பட்டி, பஞ்சப்பட்டி, சேங்கல், காட்டுப்புத்துார் ஆகிய இடங்களில் பரவலாக விவசாயிகள் கொய்யாப்பழம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது சீசன் முடிந்து குறைவான காய்கள் மட்டும் கிடைத்து வருகிறது. இதனால் வரத்து சரிந்து, விலை உயர்ந்து லாலாப்பேட்டையில் விற்கப்படுகிறது.
கடந்த மாதம் கிலோ, 70 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கொய்யப்பழம் மருத்துவத்திற்கு பயன்படுவதால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.