/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலையில் கை துப்பாக்கியுடன் அதிரடி வாகன சோதனைகுளித்தலையில் கை துப்பாக்கியுடன் அதிரடி வாகன சோதனை
குளித்தலையில் கை துப்பாக்கியுடன் அதிரடி வாகன சோதனை
குளித்தலையில் கை துப்பாக்கியுடன் அதிரடி வாகன சோதனை
குளித்தலையில் கை துப்பாக்கியுடன் அதிரடி வாகன சோதனை
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
குளித்தலை: குளித்தலை, திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது.
அப்போது கை துப்பாக்கியுடன் போலீசார் வந்திருந்தனர்.வாகன ஓட்டிகள் ஓட்டுனர் உரிமம், வாகனம் உரிமம், இன்-சூரன்ஸ், நான்கு சக்கர வாகனத்தில் டிரைவர் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? சரக்கு வாகனத்தின் டிரைவர் எப்.சி., உரிமம், காக்கி சட்டை அணிந்துள்ளனரா என சோதனை செய்தனர். மேலும் காரில் கொண்டு வரப்பட்ட பொருட்களையும் சோதனை செய்தனர். வாகனத்தில் நம்பர் பிளேட் அரசு உத்தரவு படி போட்டுள்ளனரா, இரு சக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணிந்து செல்லாமல் சென்றவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்-டது.மாயனுார் இன்ஸ்பெக்டர் முருகேசன், போக்குவரத்து இன்ஸ்-பெக்டர் வெங்கடாசலம் மற்றும் எஸ்.ஐ.க்கள், போலீசார் என, 50 க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென வாகன சோதனையில் ஈடு-பட்டனர். டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் கை துப்பாக்கியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. இதேபோல், சுங்ககேட் பகுதியிலும் வாகன சோதனை நடை-பெற்றது. இந்த சோதனையில் உரிய உரிமம் இல்லாமல் வாக-னங்கள் ஓட்டியவர்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.