பட்டதாரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
பட்டதாரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
பட்டதாரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
கரூர்: கரூர் அருகே, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டத்தில், ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு-பட்டனர்.கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், பட்ட-தாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்டு கூட்டம் நேற்று நடந்தது.
அதில், க.பரமத்தி சாலப்பாளையம் அரசு பள்-ளியில், கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடம், ஆன்லைனில் மறைக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி-ரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட கல்வி பொறுப்பு அலுவலர் ராமநாதன், பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பட்ட பணியிடம் ஆன்லைனில் காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.