ADDED : ஜூலை 11, 2024 12:48 AM
க.பரமத்தி: கரூர்-கோவை நெடுஞ்சாலையில் தென்னிலை உள்ளது.
25க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தென்னிலை வந்துதான், கோவை அல்லது கரூர் பகுதிக்கு பஸ்சில் செல்ல வேண்டும். தென்னிலையில் பஸ் ஸ்டாண்ட் இல்லை.இரண்டு பக்கமும், தேசிய நெடுஞ் சாலையில்தான் பஸ்கள் நிறுத்-தப்படுகிறது. தென்னிலை பஸ் ஸ்டாப் பகுதியில் ரவுண்டானா இல்லை. இதனால், சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். போக்குவரத்து நெரி-சலை தீர்க்க, தென்னிலை பஸ் ஸ்டாப்பில், ரவுண்டானா அமைக்க வேண்டியது அவசியம்.