/உள்ளூர் செய்திகள்/கரூர்/24 அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்24 அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
24 அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
24 அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
24 அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
ADDED : ஜூலை 16, 2024 01:49 AM
கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் வடபாகத்தில் உள்ள புனித மரி-யன்னை அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில், முதல்வர் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்-டத்தில், 705 அரசு தொடக்கப்பள்ளிகளில், 30,144 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். 24 அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 1,677 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், கரூர் மாந-கராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு சங்ககளின் இணை பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.* குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்-டியில் அரசு நிதிஉதவி பெற்று செயல்பட்டு வரும், தனம் தொடக்-கப்பள்ளியில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாகி பிரபு, பஞ்., தலைவர் ரம்யா, குளித்தலை தி,மு.க., ஒன்றிய செயலர்கள் சந்-திரன், தியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநி-திகள் கலந்து கொண்டனர்.இதேபோல், பரளி, கண்டியூர், பாரைப்பட்டி கிராமங்களில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் துவங்கியது.