Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சாலையை சீரமைக்க கோரிக்கை

குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சாலையை சீரமைக்க கோரிக்கை

குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சாலையை சீரமைக்க கோரிக்கை

குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சாலையை சீரமைக்க கோரிக்கை

ADDED : ஜூலை 16, 2024 01:49 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் குடிநீர் குழாய் புதிதாக அமைக்கும் போது சாலையோரம் பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குழாய் அமைக்கப்பதற்காக, சாலையோர இடங்களில் பொக்லைன் இயந்-திரம் கொண்டு பறிக்கப்படுகிறது. பின் குடிநீர் குழாய் அமைக்கப்-படுகிறது. பறிக்கப்பட்ட இடம் மணலால் மட்டுமே மூடப்படுகி-றது. இதனால் சாலையின் பல இடங்களில், கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருக்கிறது. வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள மேடு பள்ளம் தெரியாமல், விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, சாலை சீராக இருக்கும் வகையில் டவுன் பஞ்-சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us