/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாதாள சாக்கடை உடைப்பு: சரி செய்ய வேண்டுகோள்பாதாள சாக்கடை உடைப்பு: சரி செய்ய வேண்டுகோள்
பாதாள சாக்கடை உடைப்பு: சரி செய்ய வேண்டுகோள்
பாதாள சாக்கடை உடைப்பு: சரி செய்ய வேண்டுகோள்
பாதாள சாக்கடை உடைப்பு: சரி செய்ய வேண்டுகோள்
ADDED : ஜூலை 16, 2024 01:49 AM
கரூர்: கரூர், ராணி மங்கம்மாள் தெருவில் ஏற்பட்டுள்ள பாதாள சாக்-கடை உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாநகராட்சிக்குப்பட்ட, ராணி மங்கம்மா தெரு வழியாக பசுபதி பாளையம், நெரூர், மோகனுார் உள்பட பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது.
இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை உடைந்து, பல முறை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பாதாள சாக்கடையால் பள்ளம் ஏற்பட்டு மராமத்து பணிகள் நடந்து வருகிறது.கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பணிகள் நடந்து வரு-வதால், பஸ், மினி பஸ், பள்ளி வாகனம் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. குடியிருப்பு வாசிகள் கூட நடந்து கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பலரது வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. போர்க்கால அடிப்ப-டையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்-வாறு கூறப்பட்டுள்ளது.