/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மணவாசி சிவன் கோவிலில் யாக வேள்வி, ேஹாம பூஜை மணவாசி சிவன் கோவிலில் யாக வேள்வி, ேஹாம பூஜை
மணவாசி சிவன் கோவிலில் யாக வேள்வி, ேஹாம பூஜை
மணவாசி சிவன் கோவிலில் யாக வேள்வி, ேஹாம பூஜை
மணவாசி சிவன் கோவிலில் யாக வேள்வி, ேஹாம பூஜை
ADDED : ஜூன் 30, 2024 02:03 AM
கிருஷ்ணராயபுரம்,
மணவாசி, மத்தியபுரீஸ்வரர் சிவன் கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி, ஹோமம் பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மணவாசி கிராமத்தில் மிகவும் பழமையான மத்தியபுரீஸ்வரர் சிவன், கோமளவள்ளி அம்மன், விநாயகர், முருகன் ஆகிய கோவில் உள்ளது. புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதால், கும்பாபிேஷக விழா நடந்து வருகிறது. காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, கோவில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்வி, ஹோமம் பூஜைகள் நடந்தன.
நேற்று சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஜூலை, 1 காலையில் கோவிலில் கும்பாபி ேஷக விழா நடக்கிறது. மணவாசி, கரூர் மற்றும் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை செய்து வருகிறது.