/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்து அபாயத்தில் ஓட்டுனர்கள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்து அபாயத்தில் ஓட்டுனர்கள்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்து அபாயத்தில் ஓட்டுனர்கள்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்து அபாயத்தில் ஓட்டுனர்கள்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்து அபாயத்தில் ஓட்டுனர்கள்
ADDED : ஜூன் 30, 2024 02:02 AM
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் பகுதியில், கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூரிலிருந்து, சின்னதாராபுரம் செல்லும் சாலையில் அதிக வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக சின்னதாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்து விடுவதால், அவை சாலையில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. குறிப்பாக மாடுகள் சாலைகளில் தாறுமாறாக திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கால்நடைகளை உரிமையாளர்கள் கண்டு கொள்ளாததால் அவை இஷ்டத்துக்கு நடமாடுகின்றன. நெடுஞ்சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கால்நடைகளை கட்டுப்படுத்த, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.