Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அமராவதி அணை நீர்மட்டம் 5 நாளில் 8 அடி உயர்வு

அமராவதி அணை நீர்மட்டம் 5 நாளில் 8 அடி உயர்வு

அமராவதி அணை நீர்மட்டம் 5 நாளில் 8 அடி உயர்வு

அமராவதி அணை நீர்மட்டம் 5 நாளில் 8 அடி உயர்வு

ADDED : ஜூன் 30, 2024 02:02 AM


Google News
கரூர், அமராவதி அணை நீர்மட்டம், ஐந்து நாட்களில், எட்டு அடி வரை உயர்ந்துள்ளது. இதனால், சாகுபடி பணிக்காக சோளம் பயிரிட்ட விவசாயிகள், அறுவடை பணிகளை தொடங்க உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையின் நீர்மட்டம், 90 அடி. கேரளா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதி, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது. கடந்த, 10 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அமராவதி அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த, 24ல் அணை நீர்மட்டம், 52.30 அடியாக இருந்தது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நேற்று காலை, 60.99 அடியாக உயர்ந்தது. கடந்த ஐந்து நாட்களில், 8.69 அடி வரை உயர்ந்துள்ளது. வினாடிக்கு அணைக்கு, 904 கன அடி தண்ணீர் வந்தது.

அமராவதி ஆற்றில் உள்ள, 18 பழைய வாய்க்கால்கள் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 25 ஆயிரத்து, 248 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வரும் நடப்பு மாதம் முதல் கட்டமாக குடிநீருக்கும், பிறகு சாகுபடி பணிக்காகவும் தண்ணீர் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளான க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கரூர் வட்டார பகுதிகளில், பருவமழையை நம்பி சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன், முற்றிய நிலையில் அறுவடை செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us