/உள்ளூர் செய்திகள்/கரூர்/மண்டல வில்வித்தை போட்டி கரூரில் வீரர்கள் தேர்வுமண்டல வில்வித்தை போட்டி கரூரில் வீரர்கள் தேர்வு
மண்டல வில்வித்தை போட்டி கரூரில் வீரர்கள் தேர்வு
மண்டல வில்வித்தை போட்டி கரூரில் வீரர்கள் தேர்வு
மண்டல வில்வித்தை போட்டி கரூரில் வீரர்கள் தேர்வு
ADDED : ஜூன் 30, 2024 02:04 AM
கரூர், கரூர் சாரதா நிகேதன் கல்லுாரியில், மாவட்ட வில்வித்தை போட்டியாளர் சங்கம் சார்பில், மண்டல அளவிலான வில்வித்தை போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடந்தது.
மாவட்ட தலைவர் கார்த்திகா லட்சுமி தலைமையில் தேர்வு தொடங்கியது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த, இந்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளை சேர்ந்த, 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 14 மற்றும் 17, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு இந்தியன், கம்பவுண்ட், ரீக்கர்வ் என மூன்று பிரிவுகளில் தேர்வு போட்டி நடந்தது.
முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு வெள்ளிப்பதக்கம், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் ஆகஸ்ட் மாதம் புதுதில்லியில் நடக்கவுள்ள தேசிய போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.