/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் விவசாயிகளுக்கு நலஉதவி 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் விவசாயிகளுக்கு நலஉதவி
'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் விவசாயிகளுக்கு நலஉதவி
'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் விவசாயிகளுக்கு நலஉதவி
'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் விவசாயிகளுக்கு நலஉதவி
ADDED : ஜூன் 14, 2024 01:04 AM
குளித்தலை, ஜூன் 14-
குளித்தலை அடுத்த தண்ணீர்பள்ளியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், முதல்வரின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் பசுந்தாள் உரம் ஊக்குவிக்கும் திட்ட நிகழ்ச்சி நடந்தது. கரூர் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை வகித்து, திட்டம் குறித்து
விவசாயிகளிடையே விளக்கமளித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம், திட்டம் குறித்த கையேடு விளக்க புத்தகத்தை
வழங்கினார்.
தொடர்ந்து, அவர் பேசுகையில், ''தமிழக முதல்வர், விவசாயத்திற்கு என, தனி மானிய பட்ஜெட்டை ஒதுக்கி உள்ளார். அதிகப்படியான பூச்சி மருந்துகளால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இறப்பதால், மண்ணின் நுண்ணுயிர் சத்து குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை முதல்வர் தொடங்கி உள்ளார். அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு மண்ணுயிர்களை காத்து விளைச்சலை அதிகப்படுத்தவும் மன்னுயிர்களான மனித உயிர்களை காக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பசுந்தாள் உர உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, விவசாயிகளுக்கு தக்கை பூண்டு விதைகளையும், தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு பாரம்பரிய விவசாயத்திற்கான பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளையும், எம்.எல்.ஏ., வழங்கினார்.
கரூர் மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி, குளித்தலை வேளாண் உதவி இயக்குனர் சுரேந்திரன், தோகைமலை வேளாண் உதவி இயக்குனர் அர்ஜுனன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் லலிதா, துணை வேளாண் அலுவலர் கணேசன், தி.மு.க., குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.