/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா
தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா
தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா
தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா
ADDED : ஜூலை 21, 2024 03:04 AM
குளித்தலை;குளித்தலை, காவிரி நகரில் உள்ள கிராமியம் கூட்டரங்கில், நேற்று கரூர் மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில், பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா, விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா, 100 சதவீத தேர்ச்சி வழங்கிய, 100 தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
சிறப்பு தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். தமிழ் பேரவை தலைவர் மணிமாறன், முன்னாள் டி.எஸ்.பி., ராசன், தமிழ் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் கோவிந்தன், மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தன், மாவட்ட தலைவர் சரவணகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் பேசினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழாசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.