Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ADDED : ஜூலை 21, 2024 03:05 AM


Google News
கரூர்;க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், அணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கழிவுநீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டியது. இதனால், அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதேபோல் கடந்த, நான்கு ஆண்டுகளாக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக, இரண்டு அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து இல்லாததால், ஆத்துப்பாளையம் அணையின் நொய்யல் வாய்க்கால் பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us