/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளப்பட்டியில் பசுமை பூங்கா திறப்பு விழா பள்ளப்பட்டியில் பசுமை பூங்கா திறப்பு விழா
பள்ளப்பட்டியில் பசுமை பூங்கா திறப்பு விழா
பள்ளப்பட்டியில் பசுமை பூங்கா திறப்பு விழா
பள்ளப்பட்டியில் பசுமை பூங்கா திறப்பு விழா
ADDED : ஜூலை 21, 2024 03:05 AM
அரவக்குறிச்சி:தனியார் அறக்கட்டளை சார்பில், 20 லட்சம் மதிப்பில் சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்காக பசுமை பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளப்பட்டியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் பொழுதுபோக்கிற்கு என்று எவ்வித பூங்காவோ, விளையாட்டு மைதானங்களோ இல்லை. இந்நிலையில், பொழுதுபோக்கிற்கு என்று பசுமை அறக்கட்டளை என்ற அமைப்பின் சார்பில், பள்ளப்பட்டி அருகே உள்ள, லிங்கமநாயக்கம்பட்டி பகுதியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
லிங்கம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று, ஏராளமான சிறுவர், சிறுமியர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.