/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி
வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி
வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி
வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி
ADDED : ஜூலை 21, 2024 03:05 AM
கரூர்;கரூர் அருகே பாசன வாய்க்கால், கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. அதில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், அமராவதி ஆற்றின் பாசன கிளை வாய்க்கால் தொடங்கி, லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மீண்டும், அமராவதி ஆற்றில் கலக்கிறது. தற்போது, ஆண்டாங்கோவில் முதல் லைட் ஹவுஸ் கார்னர் வரை, பாசன வாய்க்காலின் கரைப்பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனால், மழை இல்லாத காலங்களில், பாசன வாய்க்கால் கழிவு நீர் வாய்க்காலாக மாறி விடுகிறது.
அதில் கழிவுநீர், பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளது. மேலும், வாய்க்காலில் மரம், செடி கொடிகள் அதிகளவில் முளைத்து புதர்போல் மண்டியுள்ளது. இதனால், வாய்க்காலில் கடந்த சில நாட்களாக கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இரவு நேரம் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஆண்டாங்கோவில் முதல் லைட்ஹவுஸ் கார்னர் வரை, பாசன வாய்க்காலை துார் வாரி கொசு மருந்து அடிக்க, ஆண்டாங்கோவில் பஞ்., நிர்வாகம் மற்றும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.