/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இரு தரப்பினரிடையே முரண்பட்ட கருத்து; கோவில் திருவிழா ரத்து இரு தரப்பினரிடையே முரண்பட்ட கருத்து; கோவில் திருவிழா ரத்து
இரு தரப்பினரிடையே முரண்பட்ட கருத்து; கோவில் திருவிழா ரத்து
இரு தரப்பினரிடையே முரண்பட்ட கருத்து; கோவில் திருவிழா ரத்து
இரு தரப்பினரிடையே முரண்பட்ட கருத்து; கோவில் திருவிழா ரத்து
ADDED : ஜூலை 21, 2024 03:04 AM
குளித்தலை;குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா, டி.இடையப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், காளியம்மன், பிடாரி அம்மன், ஒண்டிவீரர், முனியப்பன் ஆகிய கோவில்கள் ஒரு சேர அமைந்துள்ளன. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இரு தரப்பினர் இடையே எந்தவிதமான பிரச்னைகளும் செய்யாமல், சந்தோஷமாக திருவிழாவை நடத்த வேண்டும் என, ஆர்.டி.ஓ., அறிவுரை வழங்கினார்.
ஆனால், இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கோவில் திருவிழாவை ரத்து செய்து, பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நேற்று நடைபெற இருந்த திருவிழா நடைபெறவில்லை. இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.