விவசாயி வீட்டில் தங்க நகை திருட்டு
விவசாயி வீட்டில் தங்க நகை திருட்டு
விவசாயி வீட்டில் தங்க நகை திருட்டு
ADDED : ஜூலை 29, 2024 01:38 AM
கரூர்: கரூர் மாவட்டம், எம்.காளிப்பாளையம் பிரதான சாலை பகு-தியை சேர்ந்தவர் வரதராஜன், 57; விவசாயி.
இவர் கடந்த, 26ல் வீட்டை பூட்டி விட்டு, வேலை விஷயமாக வெளியில் சென்று விட்டார். பின், வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் கதவு திறந்தி-ருந்தது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த, ஏழு பவுன் தங்க நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, வரதராஜன் போலீசில் புகாரளித்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.