/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செட்டிப்பாளையம் தடுப்பணையில் தேங்கிய தண்ணீர் செட்டிப்பாளையம் தடுப்பணையில் தேங்கிய தண்ணீர்
செட்டிப்பாளையம் தடுப்பணையில் தேங்கிய தண்ணீர்
செட்டிப்பாளையம் தடுப்பணையில் தேங்கிய தண்ணீர்
செட்டிப்பாளையம் தடுப்பணையில் தேங்கிய தண்ணீர்
ADDED : ஜூன் 19, 2024 01:40 AM
கரூர்,
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து,
திறக்கப்படும் தண்ணீர், கரூர் அருகே செட்டிப்பாளையம் தடுப்பு அணையில்
தேக்கி வைக்கப்படுகிறது. அணையில் உள்ள வலது கால்வாய் மூலம்,
தான்தோன்றிமலை
வட்டார பகுதிகளில், 2,240 ெஹக்டர் பாசன வசதி
பெறுகிறது. ஆனால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து எதிர்பார்த்த
அளவில் இல்லாததால், ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமராவதி ஆற்றுப்பகுதியில் பெய்து
வரும் மழை காரணமாக, கரூர் அருகே செட்டிப்பாளையம் தடுப்பு அணையில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தான்தோன்றி
மலை வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.