காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 18, 2024 07:24 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., சின்னகுழந்தைப்பட்டி என்ற பொன்னம்பட்டியில் சித்தி விநாயகர், மகா காளியம்மன், மகா மாரியம்மன், மகா பாம்பலாயிஅம்மன் ஆகிய பரிவார கோவில்கள் புதியதாக கட்டி, கும்பாபிஷேகம் செய்வது என கிராம பொது மக்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் கொண்டு வரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து, இரண்டு கால யாக வேள்வி பூஜை செய்தனர். நேற்று காலை, 10:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், யூனியன் கவுன்சிலர் சின்னையன், கூடலுார் பஞ்., தலைவர் அடைக்கலம், தோகைமலை பா.ஜ., பொதுச்செயலாளர் செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.