/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கி.புரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி கி.புரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கி.புரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கி.புரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கி.புரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 03:57 AM
கிருஷ்ணராயபுரம்,: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், சரவணபுரம், கொம்பாடிப்பட்டி, வல்லம், லாலாப் பேட்டை, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், மாயனுார், மணவாசி ஆகிய இடங்களில் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் தொடர் மழையால் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, சோளம், மரவள்ளிக்கிழங்கு, ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைப்பதால், பயிர்கள் பசுமையாக வளர்ந்து வருகிறது.