/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்
நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்
நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்
நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்
ADDED : ஜூன் 06, 2024 03:57 AM
கரூர்: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
அதில் நீதிமன்ற வளாகத்தில், 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் சண்முகம், பார் அசோசியேஷன் தலைவர் மாரப்பன், செயலாளர் வைத்தீஸ்வரன், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சொர்ணகுமார், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.