Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தோகைமலை, கடவூர் பகுதியில் எள் அறுவடை பணியில் விவசாயிகள்

தோகைமலை, கடவூர் பகுதியில் எள் அறுவடை பணியில் விவசாயிகள்

தோகைமலை, கடவூர் பகுதியில் எள் அறுவடை பணியில் விவசாயிகள்

தோகைமலை, கடவூர் பகுதியில் எள் அறுவடை பணியில் விவசாயிகள்

ADDED : ஜூன் 06, 2024 04:07 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை, கடவூர் யூனியன் பகுதிகளில் முன்னோடி விவசாயிகள், எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர்.கோடை எள் சாகுபடியை பொருத்தவரை, கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, டி.எம்.வி 6, எஸ்.வி.பி.ஆர்; 1, வி.ஆர்.ஐ (எஸ்.வி) 1, டி.எம்.வி 7, ஆகிய ரகங்களை எள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது.

மானாவாரியாக பயிரிட ஆடி, கார்த்திகை மாதம் சிறந்தவையாக இருக்கும். எள் சாகுபடி செய்வதற்கு மணல் பாங்கான வண்டல் மண், செம்மண், களிமண் வயல்கள் ஏற்றதாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். சிறிய விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து மென்மைப்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து, 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவுகளை வயலில் இட வேண்டும்.மானாவாரி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை தேவைப்படுகிறது. கிணற்று பாசன முறைகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 3 கிலோ விதை எள் தேவைப்படுகிறது. அசோஸ்பைரில்லம், 100 கிராம், சுடோமோனஸ், 100 கிராம் ஆகியவற்றுடன் எள் விதைகளை சேர்க்க வேண்டும். வடித்த கஞ்சியை ஆற வைத்து அதில் விதைக்கலவையை சேர்க்க வேண்டும். ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து, வயலில் விதைத்தால் வேர் அழுகல் போன்ற நோய்களை தாக்காமல் நன்றாக முளைக்கவும் செய்கிறது. எள் சாகுபடியில் அதிகமான தண்ணீர் தேவைப்படுவது இல்லை. ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும் போது, 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை கலந்துவிட வேண்டும். எள்ளை விதை நேர்த்தி செய்து ஜீவாமிர்த கரைசலையும் கொடுத்தால் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அதன் பிறகு 45 முதல் 55 நாட்களில் பூ எடுக்க தொடங்கிவிடும்.கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு, முழு அளவு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து (யூரியா 30 கிலோ) மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து (பொட்டாசியம் 8 கிலோ) என்ற அளவில் உரங்கள் இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ மணலுடன் கலந்து அடி உரமாக இடலாம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட்டை, 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் துாவும் போது மாங்கனீசு பற்றாக்குறையை சரி செய்ய முடியும். நடவு செய்த, 15 முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். 15 நாட்களுக்கு பிறகு அடுத்த களை எடுக்க வேண்டும். மேற்படி, முறைகளில் எள் சாகுபடியை விவசாயிகள் கடைப்பிடித்து வந்தால், குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us