/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துார் வாரிய மண்ணை சாலையில் கொட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு துார் வாரிய மண்ணை சாலையில் கொட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு
துார் வாரிய மண்ணை சாலையில் கொட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு
துார் வாரிய மண்ணை சாலையில் கொட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு
துார் வாரிய மண்ணை சாலையில் கொட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2024 04:07 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த, நங்கம் காட்டு வாரியில் பொது பணித்துறை சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் துார் வாரும் பணி நடந்து வருகிறது.
பணியின் போது, அகற்றப்பட்ட மண்ணை கிராம சாலையில், கோபுரம் போல் கொட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், வடிகால் வாய்க்காலில் இரண்டு கரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அகற்றப்பட்ட மண்ணை இரண்டு கரையிலும் கொட்டப்பட்டு வருகிறது. இதில் வாகனங்கள் செல்வதால், அகற்றப்பட்ட மண்ணை சமன் செய்து, பொது பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கிராமச்சாலையில் கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நங்கவரம் சமூக ஆர்வலர் கார்மேகம் பொது பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.