Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகி செல்லும் குடிநீர்

குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகி செல்லும் குடிநீர்

குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகி செல்லும் குடிநீர்

குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகி செல்லும் குடிநீர்

ADDED : ஜூன் 06, 2024 04:08 AM


Google News
குளித்தலை,: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., கே.துறையூர் பகுதியில், காவிரி கூட்டு குழாய் பழுதாகி குடிநீர் வீணாகி வருவதால், குழாயை சரி செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதி மற்றும் மதுரை மாவட்டம் மேலுார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து தோகைமலை வழியாக குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் குடிநீர் வீணாகி வருகிறது.கே.துறையூர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிரே, குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில், காவிரி கூட்டுகுடிநீர் குழாய் சேதமாகி உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக சேதமான குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரானது, தற்போது கடந்த இரு நாட்களாக குழாயில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.இதனால் அருகில் உள்ள, குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு தார்சாலை சேதமாகி வருவதோடு, 2 கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் செல்கிறது. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியை ஆய்வு செய்து, காவிரி குடிநீர் திட்ட பொறியாளர்களை தொடர் கண்காணிப்பில் இருந்து, உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us