/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலையில் முறிந்து விழுந்த மரம் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு சாலையில் முறிந்து விழுந்த மரம் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு
சாலையில் முறிந்து விழுந்த மரம் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு
சாலையில் முறிந்து விழுந்த மரம் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு
சாலையில் முறிந்து விழுந்த மரம் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு
ADDED : ஜூன் 06, 2024 03:56 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மருதுார்-மேட்டுமருதுார் நெடுஞ்சாலையில் நேற்று மாலை காற்று இடியுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் பழமை வாய்ந்த மரம் முறிந்து மின் கம்பியில் விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.மேட்டுமருதுார் மக்கள் கொடுத்த தகவல்படி, பணிக்கம்பட்டி மின்வாரிய துணை பொறியாளர் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். மருதுார் டவுன் பஞ்., பணியாளர்கள் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றினர். இதையடுத்து, மின் வாரிய பணியாளர்கள் தடையில்லாத மின்சாரம் வழங்கினர். இதனால், இச்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனடியாக பணிகளை முடித்து கொடுத்த மின்சார வாரியம் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.* அரவக்குறிச்சியில் நேற்று மதியம், 2:30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கி பின்னர் கன மழையாக கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில், மக்கள் திரையரங்கம் எதிரே இருந்த பெரிய வேப்பமரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழை நின்ற சிறிது நேரத்தில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.