/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை; கரூர் மாவட்ட பொதுமக்கள் ஏமாற்றம் சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை; கரூர் மாவட்ட பொதுமக்கள் ஏமாற்றம்
சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை; கரூர் மாவட்ட பொதுமக்கள் ஏமாற்றம்
சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை; கரூர் மாவட்ட பொதுமக்கள் ஏமாற்றம்
சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை; கரூர் மாவட்ட பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 30, 2024 04:42 AM
கரூர்: கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க, மத்-திய பொது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என பொது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அறிவிப்பு இல்லாததால், கரூர் மாவட்ட பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தென் மாவட்ட பகுதிகளாக மதுரை, திருநெல்வேலி, ராமநாத-புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நுழைவு வாயிலான கரூரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், 46 எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்கின்றன. அதில், 22 ரயில்கள் நாள் தோறும் நின்று செல்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்-ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கரூர் வழியாகதான் ரயில்கள் சென்று வருகின்-றன.மேலும், கரூரில் பஸ் பாடி கட்டும் தொழில், ஜவுளி தொழில் மற்றும் கொசு வலை உற்பத்தி தொழிலில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் பல்வேறு தொழில் நிமித்தம் காரணமாக, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதி-களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கரூர் வந்து செல்கின்-றனர்.
இந்நிலையில், கரூர் வழியாக இரவு நேரத்தில் மட்டும் சென்-னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கரூரில் இருந்து, பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் இல்லை. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல சேலம், ஈரோடு, திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது. இதனால், கரூரில் இருந்து சேலம் அல்லது திருச்சி வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, பொது-மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந் தனர்.