/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டுகோள் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டுகோள்
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டுகோள்
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டுகோள்
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 30, 2024 04:48 AM
கரூர்: அரங்நாதம்பேட்டையில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என, வன்னியர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட பஞ்சாயத்துகளில், லோக்சபா தேர்தலக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் முடிந்த பிறகு பெரும்பாலான கிராமங்களில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மீண்டும் பணி வழங்கப்பட்டு வருகி-றது.
ஆனால், நெரூர் தென் பாகம் பஞ்.,க்குபட்ட அரங்நாதம்பேட்-டையில், 100 நாள் வேலை உறுதி திட்ட பணிகள் வழங்கப்பட-வில்லை. திட்டமிட்டு வேலை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்-டுள்ளது. ஏழை கூலி தொழிலாளிகள் மிகவும் சிரமப்பட்டு வரு-கின்றனர். உடடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.