ADDED : ஜூலை 07, 2024 02:56 AM
அரவக்குறிச்சி:புன்னம்சத்திரம் அருகே, பெரியரங்கபாளையம் பகுதியில் மது விற்பதாக வேலாயும்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள முட்புதரில் பெண் ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து, 1,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வசந்தா, 64, என்பவரை கைது செய்தனர்.