ADDED : ஜூலை 07, 2024 02:56 AM
குமாரபாளையம்;குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னப்பநாயக்கன்பாளையம், ராஜராஜன் நகர் பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த கணேசன், 40, செல்வம், 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல், சத்யா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளி சுரேந்திரன், 35, என்பவர், மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தார். குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்து, 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.