/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
ADDED : ஜூன் 13, 2024 06:54 AM
கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், விவசாயிகள் கத்திரிக்காய் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், அந்தரப்பட்டி, பஞ்சப்பட்டி, மலையாண்டிப்பட்டி, வயலுார், கோவக்குளம், கோவில்பட்டி, சிவாயம், வேப்பங்குடி ஆகிய பகுதி விவசாயிகள் பரவலாக காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அதிகமாக கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் செடிகள் பசுமையாக வளர்ந்து பூக்கள் பிடித்து காய்கள் பிடித்துள்ளது. இதை பறித்து விவசாயிகள் உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காய்கறி விற்பனை மூலம் குறைந்த செலவில் ஓரளவு வருமானம் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.