/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காவிரியாற்றில் வெள்ள அபாயம்: கரூர் கலெக்டர் எச்சரிக்கை காவிரியாற்றில் வெள்ள அபாயம்: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
காவிரியாற்றில் வெள்ள அபாயம்: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
காவிரியாற்றில் வெள்ள அபாயம்: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
காவிரியாற்றில் வெள்ள அபாயம்: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 29, 2024 01:37 AM
கரூர்: 'காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால், எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நீர்வ ரத்து அதி கரித்து இருப்பதால் வேகமாக நிரம்பி வருகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் உள்ள சிறுவர்கள், இளை ஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பய ணிகள் உள்ளிட்ட எவரும், நீரில் இறங்கி குளிப்பது, மீன் பிடிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்தது, கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.