Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் 5,409 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு: கலெக்டர்

மாவட்டத்தில் 5,409 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு: கலெக்டர்

மாவட்டத்தில் 5,409 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு: கலெக்டர்

மாவட்டத்தில் 5,409 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு: கலெக்டர்

ADDED : ஜூலை 29, 2024 01:37 AM


Google News
கரூர்: 'மாவட்டத்தில், 5,409 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், கூட்டுறவு சங்-கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்-டுள்ளன. யூரியா, 1,827 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 394 மெட்ரிக் டன், பொட்டாஷ், 1,021 மெட்ரிக் டன், என்.பி.கே., 2,137 மெட்ரிக் டன் என, மொத்தம், 5,409 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வேளாண் மற்றும் உழவர் நலத்-துறை மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக ஐ.ஆர்., 20, கோ-50, சி.ஆர்.,1009, ஏ.டி.டீ., 53, ஏடிடீ 54, பி.பி.டி., 5204, டி.கே.எம்., 13 உள்ளிட்ட ஆகிய நெல் ரகங்கள், 123 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள், கம்பு கோ 10, ஆகியவை, 1 மெட்ரிக் கடன், விதைகள், பயறு வகை பயிர்கள், உளுந்து, கொள்ளு, துவரை கோ-7, கோ10, ஆகியவை 16 மெட்ரிக் டன்னும் எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை தரணி -கோ-6, கோ-7, டி.எம்.வி.,- 14, எள்- டி.எம்.வி., 7 ஆகியவை, 47 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளன.

மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு, 652.20 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, ஜூலை, 2024 வரை, 219.12 மி.மீ., மழை பெய்துள்ளது. ஜூன் மாதம் முடிய, 1,832 ஹெக்டேர் பரப்ப-ளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

-------------------இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us