/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில்நீர் இருப்பு 58 டி.எம்.சி., சரிவு தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில்நீர் இருப்பு 58 டி.எம்.சி., சரிவு
தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில்நீர் இருப்பு 58 டி.எம்.சி., சரிவு
தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில்நீர் இருப்பு 58 டி.எம்.சி., சரிவு
தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில்நீர் இருப்பு 58 டி.எம்.சி., சரிவு
ADDED : மார் 23, 2025 01:11 AM
தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில்நீர் இருப்பு 58 டி.எம்.சி., சரிவு
கரூர்:கடும் வெப்பம் காரணமாக, நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள, 90 நீர்த்தேக்கங்களில் தண்ணீர் கையிருப்பு, 58 டி.எம்.சி., சரிந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை வாயிலாக, மாநிலம் முழுதும், 90 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு, 224.29 டி.எம்.சி.,யாகும். இதன் மூலம், பல்வேறு மாவட்டங்களில் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு, வட கிழக்கு பருவமழையால் அணைகள், குடிநீர் வழங்கும் ஏரி ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இந்தாண்டு ஜனவரி மாதத்தில், 90 நீர்த்தேக்கங்களில், 198.47 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு இருந்தது. கோடை வெயில் காரணமாக, தற்போது
நீர்த்தேக்கங்களில் நீர் கையிருப்பு, ஜன., மாதத்தை விட சரிந்துள்ளது. கடும் வெப்பக்காற்று காரணமாக ஆவியாதல் அளவு அதிகரித்துள்ளதே, இதற்கு காரணம் என, நீர்வளத்துறையினர் கூறுகின்றனர்.
மேட்டூர் அணையில் ஜன., 1ல், முழு கொள்ளளவான, 120 அடி, 93.47 டி.எம்.சி., என, 100 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. நேற்றைய நிலவரப்படி, 108 அடி, 76 டி.எம்.சி., என, 81.40 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. ஜன., 1ல், அமராவதி அணையில், 90 அடி கொள்ளளவில், 89.57 கன அடியும், 4.01 டி.எம்.சி., என, 99.04 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. நேற்று அமராவதியில், 50.79 அடி, 1.21 டி.எம்.சி., என, 30 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. ஜன., 1ல் பவானிசாகர் அணையில் மொத்த கொள்ளளவான, 105 அடியில், 97.71 அடியும், 26.97 டி.எம்.சி., என, 82.24 சதவீதம் இருந்தது. நேற்று பவானிசாகரில், 80.98 அடியும், 16.21 டி.எம்.சி., என, 49.42 சதவீதம் இருந்தது.
இதே போல், 90 நீர்த்தேக்கங் களிலும் சேர்த்து, 140.47 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளது. இது மொத்த நீர் இருப்பில், 62.63 சதவீதமாகும். கடந்த ஜனவரியை விட, தற்போதைய நிலவரப்படி தண்ணீர் இருப்பு, 58 டி.எம்.சி., சரிந்துள்ளது. நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால், கோடைக்கால குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.