/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சி விவசாயிகளுக்குபண்ணை பள்ளி வகுப்பு அரவக்குறிச்சி விவசாயிகளுக்குபண்ணை பள்ளி வகுப்பு
அரவக்குறிச்சி விவசாயிகளுக்குபண்ணை பள்ளி வகுப்பு
அரவக்குறிச்சி விவசாயிகளுக்குபண்ணை பள்ளி வகுப்பு
அரவக்குறிச்சி விவசாயிகளுக்குபண்ணை பள்ளி வகுப்பு
ADDED : மார் 23, 2025 01:17 AM
அரவக்குறிச்சி,:அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், சேந்தமங்கலம் மேற்கு கிராம விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.
அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா தலைமை வகித்து, வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். சேந்தமங்கலம் மேற்கு கோட்டப்பட்டி கால்நடை மருத்துவர் மைதிலி, 'விவசாயிகளுக்கு செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு முறைகள் அவைகளுக்கு வழங்கும் தடுப்பூசி, கொட்டகை பராமரிப்பு, கால்நடைகளுக்கு அளிக்கும் தீவன முறைகள்' குறித்து விளக்கம் அளித்தார்.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். பயிற்சி இறுதியில் விவசாயிகளுக்கு நுண் ஊட்ட கலவை வழங்கப்பட்டது. மேலும் லாபகரமான செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு முறை குறித்த தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது. பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். 25 விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா, விதை சான்று அலுவலர் ராஜவேலன் உள்ளிட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.