/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாசன குளங்களுக்கு காவிரி உபரி நீர் நிரப்பவாய்ப்பு உள்ளதா; பொறியாளர் கள ஆய்வு பாசன குளங்களுக்கு காவிரி உபரி நீர் நிரப்பவாய்ப்பு உள்ளதா; பொறியாளர் கள ஆய்வு
பாசன குளங்களுக்கு காவிரி உபரி நீர் நிரப்பவாய்ப்பு உள்ளதா; பொறியாளர் கள ஆய்வு
பாசன குளங்களுக்கு காவிரி உபரி நீர் நிரப்பவாய்ப்பு உள்ளதா; பொறியாளர் கள ஆய்வு
பாசன குளங்களுக்கு காவிரி உபரி நீர் நிரப்பவாய்ப்பு உள்ளதா; பொறியாளர் கள ஆய்வு
ADDED : மார் 23, 2025 01:08 AM
பாசன குளங்களுக்கு காவிரி உபரி நீர் நிரப்பவாய்ப்பு உள்ளதா; பொறியாளர் கள ஆய்வு
குளித்தலை:குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஜனவரி மாதம் வந்தார். அப்போது காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக முன்னாள் முதல்வர் ஜெயராமன், காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க தோகைமலை ஒன்றிய தலைவர் பெருமாள் ஆகியோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதில், குளித்தலை, தோகைமலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களில் உள்ள ஏரிகள் மற்றும் பாசன குளங்கள் மழை நீரை மட்டுமே நம்பி உள்ளது. பருவ மழை கூடுதலாக இருந்தால் மட்டுமே, குளங்கள் முழு கொள்ளளவை எட்டுகின்றன. பல ஆண்டுகளாக பருவ மழை சரியாக பெய்யாமல் ஏரிகள், குளங்கள் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக பஞ்சப்பட்டி பெரிய ஏரி, பாப்பக்காப்பட்டி, கழுகூர், கூடலுார், நல்லுார், தோகைமலை, பில்லுார், வடசேரி, புழுதேரி, அழகாபுரி காப்பேரி ஆகிய பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி பல ஆண்டுகளாகிறது.
ஒவ்வொரு ஆண்டும், காவிரியின் உபரி நீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. எனவே காவிரியின் தெற்கு பகுதியில் உள்ள குளித்தலை, தோகைமலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஏரிகள், பாசன குளங்களுக்கு புதிய திட்டத்தின் வாயிலாக, மின்மோட்டார்கள் (பம்பிங்) முறையில் காவிரியில் உபரி நீராக செல்லும் காலங்களில், உபரி நீரை கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை செயல்படுத்தினால், விவசாயம் பாதுகாப்பதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, மக்களுக்கு குடிநீர் ஆதாரத்திற்கும் நிரந்தர தீர்வு ஏற்படும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நீர்வளத்துறை (திட்டம் மற்றும் வடிவமைப்பு) உதவி பொறியாளர் பசுபதி தலைமையில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் முருகேசன் மற்றும் நாகராஜ் முன்னிலையில், காப்பேரி குளம், புழுதேரி பெரிய ஏரி, வடசேரி பெரிய ஏரி, பில்லுார் உள்பட பல்வேறு பாசன குளங்களை ஆய்வு செய்தனர்.