/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் - சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கப்படுமா? கரூர் - சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கப்படுமா?
கரூர் - சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கப்படுமா?
கரூர் - சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கப்படுமா?
கரூர் - சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கப்படுமா?
ADDED : ஜூலை 08, 2024 05:03 AM
கரூர் : கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 48 எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்கின்றன. அதில், 24 ரயில்கள் நாள்தோறும் நின்று செல்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்-களுக்கு கரூர் வழியாகத்தான் ரயில்கள் சென்று வருகின்றன.
மேலும், கரூரில் பஸ் பாடி கட்டும் தொழில், ஜவுளி தொழில் மற்றும் கொசு வலை உற்பத்தி தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் பல்-வேறு தொழில் நிமித்தம் காரணமாக, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கரூர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மங்களூர் - சென்னை, பாலக்கோடு - சென்னை எழும்பூர்,- பழநி வரை, கரூர் வழியாக ரயில்கள் இரவு நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. கரூரில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் இல்லை. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பகல் நேரத்தில் சென்-னைக்கு செல்ல சேலம், ஈரோடு, திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது. இதனால், கரூரில் இருந்து சேலம் அல்லது திருச்சி வழி-யாக சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், பகல் நேர ரயில் இயக்கப்படுவது கிடப்பில் உள்ளது. இதனால், கரூர் மாவட்-டத்தை சேர்ந்த பொது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கரூரில், சென்னைக்கு இரவு, 8:00 மணிக்கு மங்களூர் எக்ஸ்-பிரஸ் ரயிலும், 9:00 மணிக்கு பாலக்கோட்டில் இருந்து கரூர் வழி-யாக, சென்னை சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படு-கிறது. இதில், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடகா மாநி-லத்தில் இருந்து கேரளா மாநிலம் வழியாக சென்னைக்கு இயக்-கப்படுகிறது. இதில், கரூர் பயணிகளுக்கு இடம் கிடைப்பது சிர-மமாக உள்ளது. கேரளா மாநிலம் பாலக்கோட்டில் இருந்து இயக்-கப்படும் ரயிலிலும், இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி கட்டும் நிறுவனங்கள் அதிகம் உள்ள, கரூரில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் இயக்க, வரும், 23ல் வெளியாக உள்ள மத்திய பொது பட்ஜெட்டில் அறி-விப்பு வெளியானால், அனைவருக்கும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எம்.பி., ஜோதிமணி கவனிப்பாரா!
கரூர் லோக்சபா தொகுதியில் கடந்த, 2019 மற்றும் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், காங்., கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஜோதிமணி, கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.