Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தமிழ் ஆளுமையாளர்கள் 313 பேருக்கு விருது

தமிழ் ஆளுமையாளர்கள் 313 பேருக்கு விருது

தமிழ் ஆளுமையாளர்கள் 313 பேருக்கு விருது

தமிழ் ஆளுமையாளர்கள் 313 பேருக்கு விருது

ADDED : ஜூலை 08, 2024 05:04 AM


Google News
அரவக்குறிச்சி: தமிழாலயம் என்ற தமிழ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும், தமிழகத்தை சேர்ந்த தமிழ் ஆளுமையாளர்களுக்கு விருது வழங்-கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி தனியார் மஹாலில், தமிழாலயம் சார்பில், 313 ஆளுமையாளர்களுக்கு விருது வழங்கும் இலக்கிய திருவிழா, நேற்று நடந்தது. தமிழ-கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், இந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட, 313 ஆளுமையாளர்-களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், பட்டிமன்றம், கவிய-ரங்கம், வாழ்த்தரங்கம் விவாத மேடை போன்ற நிகழ்வுகள் நடை-பெற்றது. உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் இணை இயக்-குனர் சுகுணா அனந்தபத்மநாபன், 313 ஆளுமையாளர்களுக்கு விருது வழங்கினார். தமிழாலயம் அமைப்பின் நிறுவனர் சையது அபுதாகிர், செயலாளர் தஜம்முல் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us